Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

உள்ளாட்சித் தேர்தலுக்கு தயவு செய்து எங்களை கூப்பிடாதீங்க..!! -அரசு பள்ளி ஆசிரியர்கள்...!!ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்




ற்பித்தல் பணி பாதிக்கும் என்பதால் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலுக்கானஉதவி தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க

வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் பணி என்பது தலையாயப் பணி ஜனநாயக கடமை அதனை ஒவ்வொரு முறையும் ஆசிரியர்கள் திறம்பட செய்துவருகின்றோம்இதுவரை தேர்தல் நடைபெறும் நாள் அதற்காக இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை நாளிலோ வேலை நாளிலோ பயிற்சி வகுப்புகள் நடக்கும்.
தேர்தலுக்கு முந்தைய நாள் முன்னேற்பாடுகளுக்காகவும் தேர்தலுக்காகவும் தொடர்ந்து இரண்டு நாட்கள் என பணிபுரிந்து வந்தோம்வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்டவாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் கடந்த தேர்தல் வரை பணியாற்றி வந்தோம்அது கற்பித்தல் பணி பாதிக்காத அளவிற்கு நடந்தது.
 
தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ளஉள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக பணியமர்த்தப்படுவதால் தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து குறிப்பாக வேட்புமனு பெறுவதிலிருந்து தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதம் வரை நீடிக்கும் உதவி தேர்தல் அதிகாரி பணி அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும்ஏற்கனவே வாக்காளர் சரிபார்ப்பு பணி BLO, DLO போன்ற பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியர் வீதம் வருடம் முழுவதும் பணிபுரிந்து வருகிறார்கள்இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக உதவி தேர்தல் அதிகாரி பணி வழங்குவதால் கற்றல்-கற்பித்தல் பணி பெரிதும் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே பல்வேறு பணிகளுக்கிடையில் கற்பித்தல் பணி நடைபெற்று வருகிறதுபுதிய பாடத்திட்டம்அதிக பாடம் பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்வதற்கு போதிய கால அவகாசமின்றி சிரமப்பட்டு வருகின்றோம்இந்நிலையில் உதவி தேர்தல் அதிகாரி பணி வழங்கப்படுவதால் முற்றிலும் கற்பித்தல் பணி பாதிக்கும்எப்போதும்போல் வழங்கும் தேர்தல் பணி மட்டுமல்ல எப்பணி செய்யவும் ஆசிரியர்கள் தயாராக இருக்கின்றோம்ஆனால் கற்பித்தல் பணி ? எனவே மாணவர்களின் நலன்கருதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி பணியிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகிறோம் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயவு செய்து எங்களை கூப்பிடாதீங்க..!! -அரசு பள்ளி ஆசிரியர்கள்...!!ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயவு செய்து எங்களை கூப்பிடாதீங்க..!! -அரசு பள்ளி ஆசிரியர்கள்...!!ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் Reviewed by Rajarajan on 3.11.19 Rating: 5

கருத்துகள் இல்லை