தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு எப்போது..?
மத்திய அரசு, தனது கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவித்துள்ளது. இதன் காரணமாக DA 34ல் இருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில் மத்திய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படி உயர்வு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ஒவ்வொரு ஆண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி நாளுக்கு நாள் ஏறிய வண்ணமே உள்ளது. சாமானிய மக்களும் இதனால் பெரிதும் திண்டாடி வருகின்றனர். மறுபுறம் அரசு ஊழியர்கள் இந்த விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க அரசு அகவிலைப்படியை வருடாவருடம் உயர்த்தி வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி மற்றும் பொதுச் செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் ஆகியோர் இணைந்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டதை போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வேறு வருவதால் காலதாமதமின்றி உடனடியாக இது சம்மந்தபட்ட முடிவை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை