தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி தமிழ் மொழி கட்டாயம் உயர்கல்வித்துறை.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி தமிழ் மொழி கட்டாயம் உயர்கல்வித்துறை.
தமிழக அரசு, கல்வி முறையில் தமிழின் பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்இ மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழியில் வினாக்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசு துறைகளில் தமிழ் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழக பல்கலைக்கழகங்களுக்கு புதிய உத்தரவை உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தனது சுற்றறிக்கை மூலமாக வெளியிட்டுள்ளார்.
அதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழி பாட திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடத்திட்டமாக இல்லை. அந்த வகையில் இனி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் பாடமும் இடம் பெற வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை நடப்புக் கல்வியாண்டில் நடைபெற இருக்கும் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் அமல்படுத்த வேண்டும் என தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தனது சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை