இந்தியாவில் நாளை முதல் Digital Currency டிஜிட்டல் நாணயம் அறிமுகமாகிறது - ரிசர்வ் வங்கி
இந்தியாவில் புதிய முயற்சியாக டிஜிட்டல் நாணயம் சோதனை முறையில் நாளை அறிமுக செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் நாளை அறிமுகம் செய்யப்பட்டு, அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்த டிஜிட்டல் கரன்சி மூலம் அரசுப் பத்திரங்கள், பங்கு பரிவர்த்தனை போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில், மொத்த பயன்பாட்டில் டிஜிட்டல் கரன்சியை முதற்கட்டமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மாதத்தில், சில்லரை வர்த்தக அளவில் இந்த கரன்சியின் பயன்பாட்டை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் டிஜிட்டல் கரன்சிகளை உலக நாடுகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. ஸ்வீடன் உள்ளிட்ட 9 நாடுகளில் ஏற்கெனவே டிஜிட்டல் நாணயம் பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் நாளை முதல் Digital Currency டிஜிட்டல் நாணயம் அறிமுகமாகிறது - ரிசர்வ் வங்கி
Reviewed by Rajarajan
on
31.10.22
Rating:
கருத்துகள் இல்லை