ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிக்கான வழக்கு – உயர்நீதிமன்ற தள்ளுபடி!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய கோரிக்கைகள் வைக்கப்பட்டு மனு அளிக்கப்பட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் பணியில் சேர விரும்புபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் 2011-ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை என கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் சட்டத்தின் படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி கடந்த ஏப்ரல் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
கருத்துகள் இல்லை