முதுகலை ஆசிரியர்களுக்கான CRC கூட்டம் ஒத்திவைப்பு
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் ( Teacher Professional Development ) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறும் கூட்டத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே குறுவள மையக் கூட்டம் நடைபெறும் எனவும் , பல்வேறு நிர்வாக காரணங்களால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவள் மையக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
எனவே . வருகின்ற 29.10.2022 அன்று நடைபெறவுள்ள குறுவள மையக் கூட்டத்திற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு ( 1. தமிழ் , 2. ஆங்கிலம் . 3. கணக்கு . 4.அறிவியல் . 5. சமூக அறிவியல் ) கற்பிக்கும் ஆசிரியர்களை , தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக , அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் வழியாக ஆசிரியர்களை குறுவள மையக் கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 
        Reviewed by Rajarajan
        on 
        
27.10.22
 
        Rating: 


கருத்துகள் இல்லை