எம்பிபிஎஸ் படிப்பை கைவிட்டால் ரூ. 10 லட்சம் அபராதம்...!
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்கள் படிப்பை கைவிட்டால் ரூ. 10 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்காக கவுன்சிலிங் இரண்டு கட்டங்களாக நடந்தது. இதன் மூலம் அனைத்து மருத்துவ படிப்பு இடங்களும் நிரப்பப்பட்டன.இந்த நிலையில் கவுன்சிலிங்கில் மருத்துவ படிப்பு இடங்களை பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிடுவதாக இருந்தால் அபராத தொகை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை தொடர விரும்பாவிட்டால் இன்றுக்குள் (ஆகஸ்டு 3-ந் தேதி) கல்லூரியில் இருந்து விலகி அந்த இடங்களை திரும்ப ஒப்படைக்கலாம்.நாளை மற்றும் நாளை மறுநாள் கல்லூரியை விட்டு விலகும்பட்சத்தில் கவுன்சிலிங்கின்போது அளிக்கப்பட்ட உறுதி சான்றின்படி ரூ. 1 லட்சம் அபராதமாக செலுத்த வேண்டும்.
ஆகஸ்டு 6-ந் தேதி அல்லது அதன்பிறகு கல்லூரிகளில் இருந்து விலகுபவர்கள் ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும்.அதேபோல் பி.டி.எஸ். மருத்துவ இடங்களை பெற்றவர்கள் படிப்பை தொடர விரும்பாவிட்டால் நாளைக்குள் (4-ந் தேதி) தங்களது இடங்களை திரும்ப ஒப்படைக்கலாம்.ஆகஸ்டு 5 மற்றும் 6-ந் தேதிகளில் படிப்பை கைவிடும்பட்சத்தில் ரூ. 1 லட்சமும் அதன்பிறகு கல்லூரியில் இருந்து விலகினால் ரூ. 10 லட்சமும் அபராதம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ் படிப்பை கைவிட்டால் ரூ. 10 லட்சம் அபராதம்...!
Reviewed by Rajarajan
on
4.8.19
Rating:
கருத்துகள் இல்லை