Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறையின் தேர்வு குழுமம் தொழில்தேர்வு வாரியமாக தரம் உயர்வு!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையின் தேர்வு குழுமம் தொழிற்தேர்வு வாரியமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை தொழிலாளர் நலத்துறை அமைச் சர் நிலோஃபர் கபில் நேற்று தொடங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவு, மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அனைத் தும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான பெயர் பலகையை சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் அலு வலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில்தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோஃபர் கபில் திறந்து வைத்தார். இதையடுத்து, மாநில தொழிற் பயிற்சி குழுமம் மற்றும் தொழிற் பள்ளிகள் போன்ற திட்டங்களின் கீழ் நடத்தப்படும் தேர்வுகளை சுய மாக நடத்தி சான்றிதழ்கள் வழங்க தேர்வு குழுமத்தை தேர்வு வாரிய மாக தரம் உயர்த்தி தொடங்கி வைத்தார். கருணை அடிப்படையில் வேலை தொடர்ந்து, பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை, சிறந்த படைப் பாற்றல் திறனுக்காக 17 பயிற்சி யாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை, திறனாய்வுப் போட்டி களில் வெற்றி பெற்ற 6 மாணவர் களுக்கு விருது மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகை, தொழிற் பயிற்சி நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய 12 அலுவலர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை யும் வழங்கினார். அதைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் அமைச்சர் நிலோஃபர் கபில் கூறியதாவது:

7,000 மாற்றுத்திறனாளிகளுக்கு.. வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், சிலர் 50 வயதைத் தாண்டியுள்ள னர், சிலர் படித்துக் கொண்டிருக் கின்றனர், சிலர் தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வரு கின்றனர். தற்போது 20 லட்சம் முதல் 30 லட்சம் பேர்தான் அரசு வேலைக் காக காத்துக் கொண்டிருக் கின்றனர். அதிமுக ஆட்சியில் 7 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் நிலோஃபர் கபில் கூறினார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவு, மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் அனைத்தும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப் பட்டுள்ளன.


வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறையின் தேர்வு குழுமம் தொழில்தேர்வு வாரியமாக தரம் உயர்வு! வேலைவாய்ப்பு மற்றும் பயற்சித் துறையின் தேர்வு குழுமம் தொழில்தேர்வு வாரியமாக தரம் உயர்வு! Reviewed by Rajarajan on 21.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை