வரிவிலக்கு - வருமான வரி செலுத்துவதில் புதிய நடைமுறை ! விரைவில் அறிவிப்பு
வருமான வரி விகிதங்களை மாற்றுவது குறித்து அகிலேஷ் ரஞ்சன் குழு ஆய்வறிக்கை தாக்கல்.அதன்படி நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் குறைத்து பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்.
தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 5% வரி விதிக்கப்படுகிறது.
இதே போல் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% அதற்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.
இந்த வரி கட்டமைப்பை 5 விகிதங்களாக பிரிக்க அகிலேஷ் ரஞ்சன் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரிவிலக்கு அளிக்க பரிந்துரைத்துள்ளது.ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு 10% -மாகவும், அதற்கு மேல் 20%-மாகவும் வரி விதிக்க பரிந்துரை.
புதிய பரிந்துரைகள் ஏற்கப்பட்டால் மத்திய அரசின் வருவாயில் ரு.50 ஆயிரம் கோடி வரை குறைய வாய்ப்பு.
வரிவிலக்கு - வருமான வரி செலுத்துவதில் புதிய நடைமுறை ! விரைவில் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
30.8.19
Rating:
கருத்துகள் இல்லை