எங்களுக்கும் இலவச லேப்டாப் வேணும்’ ஓவிய ஆசிரியர்கள் வேண்டுகோள்
ஓவிய ஆசிரியர்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ‘மாணவர்களுக்கு ஓவிய வகுப்புகள் எடுப்பதற்கு இப்போதுள்ள காலக்கட்டத்தில் கணினி அவசியமாகிறது. ஓவியம் என்பது தற்போது கிராபிக்ஸ் வரைக்கும் சென்று விட்டது. கிராபிக்ஸ் ஓவியங்கள் தான், இப்போது பிரபலமடைந்து வருகிறது.
அந்த வகையில், முந்தைய ஓவிங்களையும் கிராபிக்ஸ் ஓவியங்கள் வரைவது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஓவிய ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் கணினி வழியிலேயே ஓவியம் வரையும் திறன் மேம்படும்’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எங்களுக்கும் இலவச லேப்டாப் வேணும்’ ஓவிய ஆசிரியர்கள் வேண்டுகோள்
Reviewed by Rajarajan
on
30.8.19
Rating:
Reviewed by Rajarajan
on
30.8.19
Rating:


கருத்துகள் இல்லை