Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

இந்திய ரயில்வேயின் ICF மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு

இந்திய ரயில்வேயின் சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையின் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பிசியோதெரபிஸ்ட் 
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.56,300 (தோராயமாக)
வயதுவரம்பு: 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்று அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் 2 ஆண்டு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: பார்மசிஸ்ட்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.47,900 (தோராயமாக)
வயதுவரம்பு: 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடங்கள் கொண்ட பிரிவில் பிளஸ் டூ முடித்து பார்மசிஸ்ட் பிரிவில் டிப்ளமோ அல்லது பி.பார்ம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை டி.டி.யாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் அல்லது தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Assistant Personnel Officer/Recruitment, Integral Coach Factory, Chennai - 600 038
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  என்ற லிங்கில் சென்று https://icf.indianrailways.gov.in//downloadfile_2.jsp?filename=1564050413119-pharma.pdf தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2019
இந்திய ரயில்வேயின் ICF மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய ரயில்வேயின் ICF மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு Reviewed by Rajarajan on 5.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை