தமிழக அரசின் இலவச கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த சேனல் அரசு கேபிளில் 200ஆவது அலைவரிசையில் இலவசமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறுகையில், கல்வி தொலைக்காட்சித் திட்டத்தை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது. எனவே, இலவசமாக வழங்கப்படும் இந்தச்சேனலை கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். விரைவில் அரசு கேபிளில் மிகக் குறைந்த கட்டணமுள்ள சேனல்கள் பட்டியலில் கல்வி தொலைக்காட்சியும் இனி இடம் பெறும்.
மாணவர்களுக்கு பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால் மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். கட்டண வசூல் மூலம் கிடைக்கும் தொகை சேனல் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்என்றனர்.
தமிழக அரசின் இலவச கல்வி தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
Reviewed by Rajarajan
on
11.9.19
Rating:
கருத்துகள் இல்லை