அரசுக் கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், விடுதிகள், கல்லூரிக்கல்வி இயக்குநர் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்த கல்லூரிக்கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேசன் ஆணையிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்துவதற்காக, சிக்மா டெக்னாலஜி, நேஷனல் ஸ்மால் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய இரு தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கல்லூரிகளில் கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தியுள்ள கல்லூரிகள், கேமராக்களின் திறனை ஆய்வு செய்து, அது தொடர்பான அறிக்கையை மண்டல கல்லூரிக்கல்வி இயக்ககத்திடம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்த கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
Reviewed by Rajarajan
on
27.9.19
Rating:
கருத்துகள் இல்லை