ஆதார் பான் கார்டு இணைப்புக்கான கடைசி தேதி திடீர் மாற்றம்!
அரசு வழங்கும் சேவைகளுக்கு ஆதார் எண் செல்லும் என்று கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, ஆதார் எண்ணையும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பயன்படும் 'நிரந்தர கணக்கு எண்ணையும்' (பான்) இந்த வருடம் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
தற்போதைய நிலையில், இந்தியாவில் சுமார் 120 கோடிக்கு மேற்பட்டோருக்கு ஆதார் எண்ணும், சுமார் 41 கோடி பேருக்கு 'பான்' எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 22 கோடி பேருடைய 'பான்' எண்கள் மட்டுமே ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஆதார்-பான் எண்கள் இணைப்பை உறுதி செய்ய, பான் எண் இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிட்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதிக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதியுடன் அவகாசம் முடியும் நிலையில், அதனை மாற்றி டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
ஆதார் பான் கார்டு இணைப்புக்கான கடைசி தேதி திடீர் மாற்றம்!
Reviewed by Rajarajan
on
29.9.19
Rating:
கருத்துகள் இல்லை