5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா?
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள, அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற அடிப்படையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில், பெரும்பாலானவர்கள், இதுபோன்ற பொது தேர்வுகளை எழுதியவர்கள் தான். ஆனாலும், மத்திய அரசிடம் பேசி, இந்த திட்டத்தை அமல்படுத்துவதில், தமிழக அரசு, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு பெற்றுள்ளது.மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்பட செய்யும் வகையில், இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, தற்போதுள்ள நிலையே தொடரும்.
மூன்று ஆண்டுகள், தங்கள் திறனை மேம்படுத்த, மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவகாசம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர், இவ்வாறு கூறினாலும், அவர் உத்தரவை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள், இந்த தேர்வு குறித்து, எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும், &'இந்த ஆண்டே பொது தேர்வு நடத்தப்படும்&' என, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையும் ரத்து செய்யப்படவில்லை.
5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டா? இல்லையா?
Reviewed by Rajarajan
on
20.9.19
Rating:

கருத்துகள் இல்லை