திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார், சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை கண்டு மாணவர்கள் குழப்பமடைய தேவையில்லை என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதாவது , தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் சார்பில் கடந்த 09.09.2019 அன்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது அதில், மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நினைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்துவகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய மதிப்புகளை மையமாக வைத்து வரும் 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல்திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது காந்தியடிகளில் வாழ்கை வரலாற்று சிறப்புகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கலை நிகழ்ச்சிகள் அல்லது செயல்பாட்டு முறைகளை செய்ய வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம்.
இந்த உத்தரவால் காலாண்டு விடுமுறை பாதிக்கப்படுமா.? என்ற ஐயம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தாண்டு பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை ரத்தாகப்போகிறாதா என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பள்ளிகல்வித்துறை செயலாளர். அத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆண்டின் துவக்கத்திலேயே இந்தாண்டு எத்தனைநாட்கள் பள்ளிகள் நடைபெற வேண்டும் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டு வைத்துள்ளதாக கூறினார்.
திட்டமிட்டபடி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்
Reviewed by Rajarajan
on
16.9.19
Rating:
கருத்துகள் இல்லை