இனி கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நடத்துவதைப் போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடத்த தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழக உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த இந்த ஆய்வுக்கூட்டத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், உயர்கல்வித் துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கு கவுன்சிலிங் நடத்துவதைப்போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இதனை செயல்படுத்த தலைமைச் செயலாளர் அனுமதி அளித்துள்ளார்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கும் ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.#SunNews #ArtsandScience #TNGovt #Counselling pic.twitter.com/wXU7x9tRsx
— Sun News (@sunnewstamil) September 11, 2019
இனி கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை
Reviewed by Rajarajan
on
11.9.19
Rating:
கருத்துகள் இல்லை