சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க புதிய வகை மூக்கு கண்ணாடி - பள்ளி மாணவர் சாதனை
ராஜஸ்தான் மாநில பள்ளி மாணவர் ஒருவர் சாலையில் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க உதவும் வகையில் சிறப்பு மூக்கு கண்ணாடி ஒன்றை தயாரித்து உள்ளார். மூக்கு கண்ணாடியை வாகனத்தை ஓட்டுபவர் அணிந்து கொள்ளவேண்டும். அவர் வாகனத்தை இயக்கும் போது தூங்காமல் இந்தக் கண்ணாடி பார்த்து கொள்ளும். ஏனென்றால் இந்தக் கண்ணாடியின் இடது பகுதியில் இன்ஃப்ராரெட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு எல்.இ.டி பல்ப்களும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எல்.இ.டி பல்ப்களின் மூலம் இன்ஃப்ராரெட் கதிர்வீச்சு உருவாக்கப்படும். அது நமது கண் விழிகளில் பட்டு பிரதிபலிக்கும் போது அது போட்டோ டையோடு மீது பட்டு சிக்னல் உருவாக்கும். இதன்மூலம் ஒரு அதிர்வு ஏற்படும் எனவே ஓட்டுநர் தூங்காமல் விழித்து இருப்பார்.
சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க புதிய வகை மூக்கு கண்ணாடி - பள்ளி மாணவர் சாதனை
Reviewed by Rajarajan
on
1.10.19
Rating:
கருத்துகள் இல்லை