SSLC & HSC தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலும் தேர்வு எழுதலாம்
கடந்த கல்வியாண்டுகளில் தேர்ச்சியடையாத 11,12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி விடுத்துள்ள அறிக்கையில், பழைய பாடத்திட்டத்தில் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெறாத 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பொதுத்தேர்வில் கடந்தாண்டுகளில் தேர்ச்சி பெறாத 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுதலாம் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்ச்சி பெறாத 11,12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி, இந்த பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
SSLC & HSC தேர்ச்சி பெறாத மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலும் தேர்வு எழுதலாம்
Reviewed by Rajarajan
on
1.10.19
Rating:
Reviewed by Rajarajan
on
1.10.19
Rating:


கருத்துகள் இல்லை