மாணவர்களின் வருகையை அதிகரிக்க புது முயற்சி, பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பு
மத்திய பிரதேசத்தில், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான திண்டோரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களின் வருகையை அதிகரிக்க பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுகூடி திட்டம் வகுத்துள்ளனர். அதன்படி, குழந்தைகளை கவரும் விதமாக பள்ளியின் கட்டுமானத்தை ரயில்போல அமைக்கலாம் என முடிவெடுத்து தங்களது சம்பளப் பணத்தையும் அதற்காக வழங்கியுள்ளனர்.
அந்த வகையில், பள்ளியின் சுவற்றில் அச்சு அசலாக ரயிலை பிரதிபலிப்பதுபோன்ற பல வகை வண்ணங்கள் பூசப்பட்டன. ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் ரயில்களில் உள்ளதுபோலவே அமைக்கப்பட்டன.
பள்ளிக்கட்டிடத்தின் முன் பகுதி நிஜமான ரயில் எஞ்சினின் தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம், மாணவர்கள் முன்பைவிட தற்போது அதிக மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளது. அம்மாவட்டத்தில் ரயில் சேவை கிடையாது என்பதால், மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும் இப்பள்ளியானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாணவர்களின் வருகையை அதிகரிக்க புது முயற்சி, பொதுமக்களிடையேயும் பெரும் வரவேற்பு
Reviewed by Rajarajan
on
8.10.19
Rating:
கருத்துகள் இல்லை