School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செய்திகள் - 09.10.19
திருக்குறள்
அதிகாரம்:கள்ளாமை
திருக்குறள்:290
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
விளக்கம்:
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.
பழமொழி
A little stream will run a light mill.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
இரண்டொழுக்க பண்புகள்
1. போக்குவரத்து விதிகளை மீறி நடப்பது மரணம் மற்றும் விபத்துகள் நடைபெற வழிவகுக்கும்.
2. எனவே எப்போதும் சாலை விதிகளை மதித்து நடப்பேன்.
பொன்மொழி
கையில் இருக்கும் கடமையை உடனடித் தேவையாக செய்தால் வெற்றியும் புகழும் காலம் நமக்கு அளிக்கும்
----திருவள்ளுவர்
பொது அறிவு
* வேர் இல்லாத தாவரம் எது?
இலுப்பை
* 3 நிமிடம் மட்டுமே மலர்ந்திருக்கும் மலர் எது?
பார்லி மலர்
English words & meanings
1.Bacteria - a microbe which is both useful and harmful to living things. பாக்டீரியா ஒரு நுண்ணுயிரி. உயிர்களுக்கு நன்மையும் செய்யும் தீமையும் செய்யும்.
2. Backyard -a back garden. வீட்டுக்கு பின்னால் உள்ள தோட்டம் அல்லது வெற்றிடம்
ஆரோக்ய வாழ்வு
வெங்காயத்தில் உள்ளது போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச் சத்து மற்றும் விட்டமின் சி, பி2, ஏ, கே என பல சத்துகள் அடங்கியுள்ளன.
Some important abbreviations for students
D.I.Y - do it yourself.
est. - established
நீதிக்கதை
புத்திசாலி அம்மா
ஓர் ஊரில் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. அவள் கணவன் வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தான்.
பல நாட்களுக்குப் பிறகு கணவனிடமிருந்து, நீயும் குழந்தைகளும் இங்கு வந்து சேருங்கள், என்ற கடிதம் வந்தது. தன் குழந்தைகளுடன் மாட்டு வண்டியில் ஊருக்கு புறப்பட்டாள், போகும் வழியில் அடர்ந்த காட்டு வழியாக வண்டி சென்றது, ஆபத்து வரப்போவதை அறிந்த மாடுகள் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
நடுக்காட்டில் குழந்தைகளுடன் சிக்கிக்கொண்ட அவள் இங்கே புலி இருக்குமே என்று நடுங்கினாள். அருகிலிருந்த மரத்தின் கிளையில் குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் அங்கு புலி ஒன்று வருவதை பார்த்த அவள் அதனிடமிருந்து தப்பிப்பதற்காக இரண்டு குழந்தைகளின் தொடையிலும் அழுத்திக் கிள்ளி இருவரையும் அழ வைத்தாள். பின் குழந்தைகளே! அழாதீர்கள், இப்படி நீங்கள் அடம் பிடித்தால் நான் என்ன செய்வேன்.
நீங்கள் உண்பதற்கு ஆளுக்கொரு புலி பிடித்துக்கொடுத்தேன். இன்றும் அதே போல ஆளுக்கொரு புலி வேண்டும் என்கிறீர்களே. இந்தக் காட்டில் புலி இருக்கும். இன்று மாலைக்குள் நீங்கள் சாப்பிட ஆளுக்கொரு புலி தருகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள், என்று உரத்த குரலில் சொன்னாள்.
இதைக்கேட்ட புலி நடுங்கி, ஒரே பாய்ச்சலாக அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. பயந்து ஓடும் புலியை வழியில் பார்த்த நரி காட்டுக்கு அரசே! ஏன் இப்படி ஓடுகிறீர்கள்? என்ன நடந்தது என்று கேட்டது.
நரியே! நம் காட்டுக்கு ஒரு அரக்கி வந்துள்ளாள். இரண்டு குழந்தைகள் அவளிடம் உள்ளன. அந்தக் குழந்தைகள் உண்ண நாள்தோறும் ஆளுக்கொரு புலியைத் தருகிறாளாம். அதை கேட்டுத்தான் நான் ஓடிவந்தேன் என்றது.
இதைக் கேட்ட நரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் உங்களை ஏமாற்றி இருக்கிறாள். எங்கேயாவது மனிதக் குழந்தைகள் புலியைத் தின்னுமா? வாருங்கள், அவளையும் குழந்தைகளையும் கொன்று தின்போம் என்றது நரி.
நான் அங்கு வர மாட்டேன், என்று உறுதியுடன் சொன்னது புலி.
அவள் சாதாரண பெண்தான். நீங்கள் நம்பவில்லை என்றால் உங்கள் வாலையும் என் வாலையும் சேர்த்து முடிச்சுப் போடுவோம். பிறகு இருவரும் அங்கே சென்று பார்ப்போம். நம் இருவர் பசியும் தீர்ந்து விடும், என்றது நரி. நரி முன்னால் நடந்தது. புலி தயங்கித் தயங்கிப் பின்னால் வந்தது.
மரத்தில் இருந்த அவள் நரியின் வாலும், புலியின் வாலும் ஒன்றாகக் கட்டிருப்பதை பார்த்து என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தாள். கோபமான குரலில், நரியே! நான் உன்னிடம் என் குழந்தைகளுக்கு இரண்டு புலிகளை இழுத்து வரச்சொன்னால் நீ ஒரே ஒரு புலியுடன் வருகிறாய் எங்களை ஏமாற்ற நினைக்கிறாயா? புலியுடன் உன்னையும் கொன்று தின்கிறேன், என்று கத்தினாள்.
புலி பயந்துபோனது, நரியோ, புலியாரே! அவள் நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிப் பேசுகிறாள் என்றது. நரியே, என்னை ஏமாற்றி கூட்டிவந்து விட்டாயே என்று புலி திட்டியது. அதன்பிறகு வாலில் கட்டப்பட்டு இருந்த நரியை இழுத்துக்கொண்டு ஓடத்தொடங்கியது.
வாலில் கட்டப்பட்டிருந்த நரி பாறை, மரம், முள்செடி போன்றவற்றில் மோதி படுகாயம் ஆனது. புலியோ எதைப் பற்றியும் சிந்திக்காமல் நரியை இழுத்துக்கொண்டு ஓடியது. வழியில் நரியின் வால் அறுந்து மயக்கம் அடைந்து விழுந்தது. புலி எங்கோ, ஓடியே போனது. பிறகு அந்தப் பெண் தன் குழந்தைகளுடன் பாதுகாப்பாகக் கணவனின் ஊருக்குச் சென்றாள்.
நீதி :
எந்த ஒரு நிலையிலும் தைரியத்தை கைவிடக்கூடாது.
புதன்
கணிதம் & கையெழுத்து
எங்க வீட்டுத் தோட்டம்
A,B,C நாங்கள் மூன்று பேரும் சகோதரர்கள்..
A - 4 கத்தரிக்காய் செடியும்
B - 8 வெண்டை செடியும்
C - 6 மிளகாய் செடியும் வளர்த்து வருகிறோம் ...
ஒரு நாளில்
A- 4
B- 16
C- 18
காய்கள் பறித்து அம்மாவின் சமையலுக்கு கொடுப்போம் ...எனில்
கேள்வி:
¶ ஒரு செடியில் நாளில் காய்க்கும் காய்கள் எத்தனை.??
விடை:
¶ A கத்தரி 4/4 = 1
B வெண்டை.16/8= 2
C மிளகாய். 18/6= 3
Handwriting practice - 14
இன்றைய செய்திகள்
09.10.2019
* சூரிய மண்டலத்தில் ஆறாவதான சனி கிரகத்தை மொத்தம் 82 நிலவுகள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான நிலவுகளைக் கொண்ட கிரகமாக திகழந்து வந்த வியாழனை( 79 நிலவுகள்) பின்னுக்கு தள்ளி சனி கிரகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
* சென்னையில் போதுமான குடிநீர் இருப்பு இருப்பதால் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் இன்றுடன் நிறுத்தப்பட்டது.
* 2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
* 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.
* ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
Today's Headlines
🌸Astrologists discovered that Saturn, the sixth planet in the solar system is surrounded by a total of 82 moons. By which Saturn overruled the planet Jupiter so far it is considered the planet with highest number of moons (79 moons)
🌸As there is sufficient drinking water is available in Chennai, the Cauvery cooperative water transportation from Jolarpettai to Chennai by train wagons was stopped.
🌸 The 2019 Nobel Prize in Physics has been awarded to James Peebles, Michael Meyer and Tidier Cuvelos.
🌸 India's Mary Kom top the list of the quarterfinals by defeated the Thailand player by 5-0 in the 11th Women's World Boxing Championships.
🌸India tops in the World Test Championship rankings
🌸Number 1 player Novak Djokovic won the championship title in the men's singles in the Japan Open Tennis Tournament.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Reviewed by Rajarajan
on
8.10.19
Rating:
கருத்துகள் இல்லை