தமிழகத்திற்கு இன்று ரெட்;நாளை ஆரஞ்சு அலர்ட்....இந்திய வானிலை ஆய்வு மையம்
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வானிலை ஆய்வு மையம் கூறியதாவது: கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரி கடல் மற்றும் மாலத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், நாளை ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இன்று ரெட்;நாளை ஆரஞ்சு அலர்ட்....இந்திய வானிலை ஆய்வு மையம்
Reviewed by Rajarajan
on
1.12.19
Rating:
கருத்துகள் இல்லை