Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC குரூப் - 4 தெரிவு பட்டியலில் இடம் பெற்றோர் கவனத்திற்கு சில முக்கிய குறிப்புகள்!

குரூப் - 4 தெரிவு பட்டியலில் இடம் பெற்றோர் கவனத்திற்கு சில முக்கிய குறிப்புகள்!

குரூப் 4 தெரிவு பட்டியலில் இடம் பெற்றோர் நாளை முதல் பின்வரும் சான்றிதழ்களின் ஒரிஜினல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.(cv memo வில் உள்ள தகவல்கள் கீழே கவனமாக படிக்கவும்)



1.பிறந்த தேதிக்கான சான்றிதழ் (SSLC/HSC Mark Sheet)

      2.அடிப்படைக் கல்வித்  தகுதியான  SSLC அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பட்டியல்/ சான்று.

3.HSC அல்லது அதற்கு சமமான மதிப்பெண் பட்டியல்/ சான்று

4.மேலும் விண்ணப்பதாரர் தனது கணினிவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள  கல்வித்தகுதியினை Diploma/UG/PG/M.Phil/Phd எனில் அக்கல்வித்தகுதிக்கான Consolidated Mark sheets / Provisional Certificate/Convocation Certificate-ளை / பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் எந்த சான்றிதழ்களின் விவரங்கள் பதியப்பட்டுள்ளதோ அதனை மட்டும் பதிவு செய்யவும். விண்ணப்பதாரர் பதிவேற்றம் செய்யும் சான்றிதழில் உள்ள தேதியும், விண்ணப்பத்தில் அளித்துள்ள தேர்வு  முடிவு தேதியும் ஒன்றாக இருக்க வேண்டும்

5.Certificate course in computer on “Office Automation” சான்றிதழ் (இருப்பின்)

6.Training Certificate in survey obtained from ITI in Tamil Nadu.(If applicable).

7.(i) சுருக்கெழுத்துத் தட்டச்சர், நிலை- III  பதவிக்கான அரசு தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம்  நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சி சான்றிதழ்கள்.(Typewriting – Tamil Junior & Senior Grade, Typewriting – English Junior & Senior Grade, Shorthand – Tamil Junior & Senior Grade, Shorthand – English Junior & Senior Grade) ஆகிய சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  குறிப்பு:- (i). சுருக்கெழுத்துத் தட்டச்சர், நிலை- III  பதவிக்கான மேற்கண்ட தொழில்நுட்ப கல்வித்தகுதியினை தெரிவாளர் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.  அத்தொழில்நுட்ப கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களை, சமர்ப்பிக்க வேண்டும். மேலும் தொழில்நுட்ப கல்வி தகுதிக்கு   இணையான அரசாணை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இணையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், அத்தெரிவாளர் சுருக்கெழுத்துத் தட்டச்சர், நிலை- III  பதவிக்கு தகுதியற்றவராகிறார்.

8.தட்டச்சர் பதவிக்கான  விண்ணப்பதாரர்கள் அரசு தொழில்நுட்ப கல்வித்துறையின் மூலம்  நடத்தப்பட்ட தேர்வின் தேர்ச்சி சான்றிதழ்கள்.(Typewriting – Tamil Junior & Senior Grade, Typewriting – English Junior & Senior Grade,) ஆகிய சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குறிப்பு:- (ii). தட்டச்சு (ம) சுருக்கெழுத்துத் தட்டச்சு தொழில்நுட்ப கல்வித் தகுதியில் விண்ணப்பத்தாரர்கள் இத்தேர்விற்கான அறிவிக்கை நாளான 14.06.2019 அன்று அல்லது அதற்கு முன்னரோ தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

9.சாதி சான்றிதழ் – விண்ணப்பத்தாரருக்கான அறிவுரைகள் (Instructions to Applicants) பத்தி 15(ஊ)-ல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பெறப்பட்டதாக இருக்கவேண்டும்.

10.விண்ணப்பதாரர் முன்னாள் இராணுவத்தினர் எனில் அன்னாரின் PPO, Ex-servicemen Book  மற்றும்/ Bonafide சான்றிதழ்கள் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது. (முன்னாள் இராணுவத்தினரின் மனைவி/மகன்/மகள் – முன்னாள் இராணுவத்தினராக கருதப்பட மாட்டார்.)

11.விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளி எனில் உரிய மருத்துவக் குழுவிடமிருந்து  பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பதிவேற்றம் செய்தால் போதுமானது. அதில் உடல் ஊனத்தின் தன்மை, சரியான விழுக்காடு (with percentage of disability) (தேர்வாணையத்தின் விண்ணப்பத்தார்களுக்கான அறிவுரைகள் பத்தி எண். 14(ஆ)ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு)

12.ஆதரவற்ற விதவை என்பதற்கான சான்று (Destitute Widow), (விளக்கம்: “ஆதரவற்ற விதவை” என்பது அனைத்து வழியிலிருந்தும் கிடைக்கப் பெறும் மொத்த மாத வருமானமாக ரூ.4000/-ஐ (ரூபாய் நான்காயிரம் மட்டும்) மிகாத தொகை பெறுகின்ற ஒரு விதவையைக் குறிப்பதாகும்.  இவ்வருமானம் குடும்ப ஓய்வூதியம் (அ) மற்ற வருமானங்கள் (தொழிற்கல்வி பெற்றவர்களின் சுயதொழில் மூலம் ஈட்டும் வருமானம் உட்பட) எவையேனுமிருப்பின் அவற்றையும் உள்ளடக்கியதாகும்).  இத்தகைய விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் / உதவி ஆட்சியர் / சார் ஆட்சியரிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழைப் பெற வேண்டும்.  விவாகரத்து பெற்றவர் ஆதரவற்ற விதவையாகக் கருதப்படமாட்டார்.

13.விண்ணப்பத்தாரர் திருநங்கையெனில் திருநங்கைக்கான ID Card  மற்றும் அரசாணைகள்  1) G.O.(MS) No.28, BC, MBC, and Minorities Welfare (BCC) Department Dated: 06.04.2015,  2) G.O.(MS) No.90, Social Welfare and Nutritious Meal Programme (SW8(2)) Department Dated:22.12.2017 - படி சாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதனுடன் திருநங்கை விண்ணப்பதாரர் ஆண் இனத்தவராக கருத வேண்டுமா அல்லது பெண் இனத்தவராக கருத வேண்டுமா என்பதற்கான விருப்ப கடித நகல் ஒன்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

14.விண்ணப்பத்தில் ஒட்டப்பட்டது போன்று  கடவுச் சீட்டு அளவு (Passport Size) நிழற்படத்தை பதிவேற்றம் செய்ய  வேண்டும்.

15.தடையின்மைச் சான்றிதழ் (NOC). இந்த தேர்விற்கான அறிவிக்கை தேதிக்குப்பிறகு அரசுப்பணியில் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் அவர்களது பணி விவரங்கள் (பணியில் சேர்ந்த நாள், பணிபுரியும் துறை/ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா/(NOC வழங்கப்பட்டுள்ளதா) எழுத்துப்பூர்வமாக தெரிவித்து அதனை பதிவேற்றம் செய்ய  வேண்டும்.

16. தமிழ்வழிச் சான்று மாதிரி


TNPSC குரூப் - 4 தெரிவு பட்டியலில் இடம் பெற்றோர் கவனத்திற்கு சில முக்கிய குறிப்புகள்! TNPSC குரூப் - 4 தெரிவு பட்டியலில் இடம் பெற்றோர் கவனத்திற்கு சில முக்கிய குறிப்புகள்! Reviewed by Rajarajan on 5.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை