சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு , எவை இயங்காது எதற்கெல்லாம் அனுமதி
Was
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து தமிழக அரசு சார்பபில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டடுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக காணப்படும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்றும் தமழக அரசு தெரிவித்துள்ளது.
என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு:
➤ சென்னையில், அவசர மருத்துவ தேவைகள் தவிர, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனத்திற்கு அனுமதி கிடையாது.
➤ மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களிலும் 33% பணியர்களுடன் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
➤ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பணியாளர்கள் பணிக்கு வரத் தேவையில்லை. அதற்கான அனுமதியை
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டள்ளது.
➤ வங்கிகள் 33% பணியாளர்களோடு 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மட்டும் செயல்படடும்; ATM வழக்கம் போல செயல்படும்!
➤ சென்னை பெருநகர காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் உணவகங்கள் காலை 6 முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்கும். மீண்டும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.
➤ சென்னை பெருநகர காவல் எல்லைகுட்பட்ட பகுதிகளில் வரும் 19ம் தேதி முதல் 30 தேதி வரை ரேஷன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பெருநகர காவல் எல்லைகுட்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
➤ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அரசு அறிவித்த நிவாரணங்கள் ரேஷன் ஊழியர்களால் நேரடியாக வழங்கப்படும்.
➤ காய்கறி, மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும். ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வாகனங்களை பயன்படுத்தாமல் 2 கி.மீ தொலைவிற்குள் சென்று வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
➤ அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்காக அரசு மற்றும் உள்ளாட்சிஅமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.
➤ ஊடங்கங்கள், முழு ஊரடங்கு நாட்களில் பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமானப் பணி
அனுமதிக்கப்படும்.
➤ இந்த ஊரடங்கின் போது சரக்கு போக்குவரத்துக்குக்கும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது.
➤ சென்னையில் இருந்து திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக மட்டுமே பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி வழங்கப்படும்.
➤ 21 மற்றும் 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மேற்கண்ட எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும். இவ்விரு நாட்களிலும், பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படுகிறது.
➤ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும்
அனுமதிக்கப்பட மாட்டாது.
அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின்ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்
சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு , எவை இயங்காது எதற்கெல்லாம் அனுமதி
Reviewed by Rajarajan
on
15.6.20
Rating:
கருத்துகள் இல்லை