Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

NHIS - அரசாணை எண் 279 சார்பான தெளிவான விளக்கம்- மாத பிடித்தம் ?


நன்றி -திரு.தாமஸ் ராக்லேண்ட் திருச்சி

தற்போது 24.6.2020 அன்று NHIS திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அரசாணை 279 வெளியிடப்பட்டது. அதில் பார்வை 2 - ல் உள்ள 10.12.2018 ல் வெளியிடப்பட்ட அரசாணை 391 பற்றி பத்தி - 2 ல் விளக்கப்பட்டுள்ளது. அதாவது 10.12.2018 ன் ஆணையில் non network hospitals  அதாவது எந்தெந்த மருத்துவமனைகளில் NHIS மூலம் சிகிச்சை பெறலாம் என வரையறை செய்யப்படாத 

மருத்துவமனைகளில் அவசர சூழலில் சிகிச்சை பெறுவோர் அதற்கான தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் கூடுதலாக இத்திட்டத்திற்கு additional premium per emoyee , per annum ரூ.50 செலுத்த வேண்டும் என்று உள்ளதுபற்றி  குறிப்பிடப்பட்டுள்ளது.
 நன்றாக கவனிக்கவும் per employee, per annum. எனவே இதனை தேவைப்படுவோர் செலுத்த வகைசெய்து 2018 லேயே அரசாணை வந்ததை பார்வை 2 ல் குறிப்பிட்டு விளக்கியுள்ளனர். இதனை ஆசிரியர்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே தற்போது கூடுதலாக ரூ. 50 உயர்த்தப்படவில்லை. 


    பொதுவாக அரசாணைகளில் பார்வையில் குறிப்பிடப்படுகிற



அரசாணைகளை ஒவ்வொன்றாக அதனைப்பற்றிக் குறிப்பிட்டு, அதன்பின்னரே  வெளியிடப்படும் அரசாணை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். அந்த அடிப்படையிலேயே இந்த NHIS ஓராண்டு நீட்டிப்பு அரசாணையிலும் பார்வை 2 ல் உள்ள அரசாணையில் 2018 ல் non network hospitals களில் அவசர சூழலில் சிகிச்சை செய்வோர் அதற்காக தொகையை திரும்பப் பெற கூடுதலாக additional premium per employee per annum எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Was


CLICK HERE TO DOWNLOAD THE G.O

Was
NHIS - அரசாணை எண் 279 சார்பான தெளிவான விளக்கம்- மாத பிடித்தம் ? NHIS - அரசாணை எண் 279 சார்பான தெளிவான விளக்கம்- மாத பிடித்தம் ? Reviewed by Rajarajan on 29.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை