Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்!!




Was
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 2019 -20 கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்புகள் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் ஆல்-பாஸ் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், பள்ளி வருகைப் பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண்களை கணக்கிடப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.

இதற்கு வசதியாக, மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள், அவை தொடர்பான ஆவணங்கள், ரேங்க் கார்டு ஆகியவற்றை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஜூன் 27 ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அண்மையில் உத்தரவி்ட்டிருந்தது.
Was


இந்த நிலையில்தான், பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், இத்தேர்வுகளுக்கு வராத மாணவர்களுக்கு தனியாக தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றின் காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


எனவே, இவை தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணங்களால், காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை தொடர்ந்து பள்ளிகளில் வைத்து பாதுகாக்க முடியவதில்லை. இதன் காரணமாகவே, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டியுள்ளது.

பத்தாம் வகுப்புக்கு அரசு பொதுத் தேர்வை நடத்துவதால், உடல்நலக் குறைவு, உற்றார், உறவினர் மரணம் போன்ற காரணங்களால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை எழுதாத மாணவர்களுக்கு பெரும்பாலும் தனியாக தேர்வு நடத்தப்படுவதில்லை என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது,

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்!! பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்!! Reviewed by Rajarajan on 19.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை