Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

*இழி நிலையில் ஆசிரியர்கள்.....*


Was
*இழி நிலையில் ஆசிரியர்கள்.....*
📌📌📌📌📌📌📌📌
 உழைத்துப் பெறும் தன் சொந்த ஊதியத்திற்குக் கூட கையூட்டு கொடுத்துத்தான் பெற வேண்டும் என்ற நிலையில் அடிமைகளாகவே பள்ளிக்கல்வித் துறையின் ஆகப் பெரும்பாலான  ஆசியர்கள் வாழ்ந்து வருகின்றனர். பள்ளிக் கல்வித் துறையில் எழுத்தர்களே (குமஸ்தா ராஜ்யம்)  எசமானர்களாக உலா வருகின்றார். இவர்களில் பெரும்பாலானோர் கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவர்கள் என்றால் மிகை ஆகா. பாடம் சொல்லும்  ஆசிரியர்களாக ஏறத்தாழ 17 ஆண்டுகள் பணியாற்றிவிட்டுத் தலைமை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறுவதால், நிர்வாக நடை முறைப் பயிற்சி இல்லாமல் 99% தலைமை ஆசிரியர்களுக்கும் எழுத்தர்களே எசமானர்களாக விளங்குகின்றனர். கருணை அடிப்படையில் வந்தவர்களே பள்ளிக் கல்வித் துறையின் கதாநாயகர்களாக விளங்குகின்றனர். ஆசிரியர்களுக்குப் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பபட்டு புதிய பாடத்திட்டம் வரும் போது பயிற்சி அளிக்கப்படுகிறது. அதே போல் கையால் எழுதிச் சம்பளப் பட்டியல், பணப் பயன் பட்டியல் வழங்கியதிலிருந்து கணினி வழியாகப் பட்டியல் தயாரித்து வழங்கும் நிலைக்கு மாற்றப்பட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆன பின்பும் எழுத்தர்களுக்குப் பயிற்சி வழங்கப்படவில்லை; பயிற்சி வேண்டும் என்றும் அவர்கள் கேட்டதுபோலும்  இல்லை. பயிற்சி கேட்டால் வேலை செய்ய வேண்டும் என்பதாலோ என்னவோ கேட்கவில்லை. எனவே ஆரியர்களிடம் பணம் தண்டல் செய்து,  தனியார் கணினி மையங்களில் பட்டியல் தயாரித்துக் கருவூலகத்தில் வழங்குகின்றனர். எழுத்தர்களும் தலைமை ஆசிரியர்களும் தரகர்களாகவே செயல்படுகின்றார்.  சில பள்ளிகளில் இந்தக் கணினி வழி வேலை தெரிந்த ஆசிரியர்கள், மாணவர் களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய நேரத்தில் கற்பிக்காமல், பட்டியல் தயாரிக்கின்றனர். பட்டியல் தயாரித்ததும் தாள் வாங்கும் செலவு, மை நிறப்பும் செலவு என்று மாதந்தோறும் ஆசிரியர்களிடம் தண்டல் செய்து வருகின்றனர். இவ்வாறு தமிழ்நாட்டில் 90% க்கும் மேலான ஆசிரியர்கள் ஏதோ ஒரு வகையில், கையூட்டு கொடுத்துத்தான்  உழைத்த உழைப்பிற்கு,  ஊதியம் பெற்று வருகின்றனர். இது போக ஆண்டாண்டு காலமாகப் பொதுக் காப்பு நிதி (G. P. F) முன்பணம், நிலுவைத் தொகை போன்றன பெறுவதற்குக் கருவூலகத்தில் கையூட்டு கேட்கிறார்கள் என்று இந்த எழுத்தர்கள் ஆசிரியர்களிடம் வற்புறுத்திப் பெற்று வருகின்றனர். இந்த நிலையையும் தாண்டி இப்போது, புதிய பொறுக்கித்தனம் ஒன்று உருவாகி உள்ளது;  புதிதாகப் பணியில் சேரும் ஆசிரியர்கள் முதல் மாத ஊதியம் பெறுவதற்குக் கையூட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பகுத்தறிவினையும், தன் மானத்தையும் (சுயமரியாதையையும்) கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு இவ்வளவு கொடிய நிலை ஏற்பட்டுள்ளது. முதுநிலை, ஆய்வியல், கல்வியியல் எனப் படித்து, ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, 'ஆ' நிலை (GROUP - B) அலுவல் பதவிக்கு வந்து, கேவளம் 10 ஆம் வகுப்புப் படித்து விட்டு கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவர்களுக்கு அடிமைகளாகப் பணியாற்றும்  இழி நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனைத்  தமிழ் நாட்டிலுள்ள 99.9% ஆசிரியர்களோ, ஆசிரியர் சங்கங்களோ கண்டு கொள்வதே இல்லை.  இவர்கள்தான் மாணவர்களுக்குத் தன் மதிப்பையும் (சுய மரியாதை), பகுத்தறிவினையும் கற்றுத் தரும் இடத்தில் இருக்கிறார்கள்.  கொஞ்சம் கவனியுங்கள் ஒரு குரல் கேட்கிறது.  "ஆசிரியர் அரசு ஊழியர் ஒற்றுமை ஓங்குக"! - நெல்லை சங்கு, 9965868114
*இழி நிலையில் ஆசிரியர்கள்.....* *இழி நிலையில் ஆசிரியர்கள்.....* Reviewed by Rajarajan on 29.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை