Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள்


Was
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது. 
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,384 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ( குவைத் - 1, மகாராஷ்டிரா- 5, கேரளா - 1, தெலங்கானா - 4 ) 11 பேரும் அடக்கம். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. 
பலி எண்ணிக்கை: 
தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 10 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். தமிழகத்தி முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட இரண்டு பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். வேலூரைச் சேர்ந்த 25 வயதான இளம் பெண் மற்றும் சென்னயைச் சேர்ந்த 17 வயதான சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
14,901 பேர் டிஸ்சார்ஜ்: 
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 585 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,901 ஆக அதிகரித்தது. தற்போது 12,132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 27,256 பேரில், 16,964 பேர் ஆண்கள், 10,278 பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 5,44.981 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 16,447 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம் : 
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,072 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,693 ஆக உயர்ந்துள்ளது.
Was
இதை தொடர்ந்து அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 44 பேருக்கும், காஞ்சிபுரம் மற்றும் விருநகர் மாவட்டத்தில் தலா 8 பேருக்கும், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேருக்கும், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா 5 பேருக்கும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் தலா 4 பேருக்கும், தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், தர்மபுரி, அரியாலூர், நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும், சிவகங்கை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரங்கள் Reviewed by Rajarajan on 4.6.20 Rating: 5

கருத்துகள் இல்லை