பத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி
Was
பத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துவிட்டது.
தென்காசியைச் சேர்ந்த கனகராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ஊரடங்கால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். தேர்வு நடத்துவது குறித்துப் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் ஆகியோருடன் அரசு கலந்து பேசவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களின் நலன் கருதித் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ஜூலை மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதை மனுதாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்துத், தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமுள்ளதாகவும், இதை அறிந்தே அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்வைத் தள்ளிப்போடுவதே மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அரசின் முடிவில் தலையிட இயலாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளிவைக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி
Reviewed by Rajarajan
on
3.6.20
Rating:
கருத்துகள் இல்லை