Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 துணை தேர்வு எழுத உயர் நீதிமன்ற புதிய உத்தரவு

 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்களை துணை தேர்வு எழுத அனுமதிப்பதாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணை தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவிக்கு துணைத் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர் தரப்பில் வாதிடப்பட்டது.


அதேபோல் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கும் பாரபட்சம் காட்டுவதாக இருப்பதாகவும் வாதிடபட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவில், குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்று சான்று பெறுவதற்காகவே துணை தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும் அந்த உத்தரவு இந்த வழக்குக்கு பொருந்தாது எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதி இல்லை என விதிகள் விளக்கி இருப்பதாகவும் வித்யாலயா சங்கதன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் என்ற காரணத்தினால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் ஒன் வகுப்பில் ஒன்றிற்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒரு முறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 துணை தேர்வு எழுத உயர் நீதிமன்ற புதிய உத்தரவு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 துணை தேர்வு எழுத உயர் நீதிமன்ற புதிய உத்தரவு Reviewed by Rajarajan on 3.5.23 Rating: 5

கருத்துகள் இல்லை