புதிய பாராளுமன்றம் குறித்த பிரத்யோக வீடியோ மற்றும் அது குறித்த தகவல்
டெல்லியில் புதிய பாராளுமன்றம் ரூ.850 கோடி மதிப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாராளுமன்றம் குறித்த பிரத்யோக வீடியோ, புகைப்படங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
உள்பகுதி லோக்சபா கட்டடம் தேசியப் பறவையான மயிலையும், ராஜ்யபசபா கட்டடம் தேசிய மலரான தாமரையையும் கருப்பொருளாகக் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய பாராளுமன்ற கட்டிடம்: உள்பகுதியில் மூன்று தேசிய சின்னங்கள் உள்ளன - தாமரை, மயில் மற்றும் ஆலமரம்.
இந்த புதிய பாராளுமன்றத்தில் லோக்சபாவில் 888 பேரும், ராஜ்யசபாவில் 384 பேரும் என இரு அவைகளிலும் மொத்தம் 1,272 பேர் அமரலாம். லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள செங்கோல் வைக்கப்பட உள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார். இது 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.970 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. இதில் நான்கு தளங்களுடன், 1,224 பேர் அமரும் வகையில் புதிய பாராளுமன்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய பாராளுமன்ற கட்டிட வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இன்று பகிர்ந்துள்ளார். அதில்
பாராளுமன்றத்தின் உட்புறக் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, புதிய பாராளுமன்ற கட்டிடத்தால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான எண்ணங்களை, உங்கள் பின்னணி குரலுடன் இந்த வீடியோவை அதிகம் பகிரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை