ELGI நிறுவனத்தில் +2 மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு
ELGI நிறுவனத்தில் +2 மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி கல்வி மற்றும் வேலை வாய்ப்பு
ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
நமது நாட்டில் வளர்ந்துவரும் தொழில்துறையில் இனிவரும் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை கருத்தில்கொண்டு தொலைநோக்குப்பார்வையில் மாணவர்களை வளமான எதிர்காலத்திற்கு தயாராக்கும் வகையிலான மெசினிங், அசெம்பெளி மற்றும் பௌண்டரி டெக்னாலஜி ஆகிய பயிற்சிகளை உலகளவில் கம்ப்ரசர் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இந்த பயிற்சியில் சேர கீழ்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி - குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள், வயது: 17 முதல் 19 வரை | பயிற்சி காலம்: 3 ஆண்டுகள் (மேனுபேக்சரிங் டெக்னாலஜி)
மேற்குறிப்பிட்ட பயிற்சிக்கு தொழில்முறை மற்றும் செயல்முறை பயிற்சி அளிக்கப்படும்
முதலாம் ஆண்டு மாதம் ரூ.8,000/-
உதவித்தொகை:
இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.9,000/-
மூன்றாம் ஆண்டு மாதம் ரூ. 10,000/-
புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் சீருடைகள் மற்றும் காலணிகள் கேண்டீன் வசதி
இந்தப் பயிற்சி காலம் முழுவதும் மாணவர்கள் எல்ஜி நிறுவன விதிமுறைகளின்படியும், பயிற்சி திட்ட ஒப்பந்தபடியும் பயிற்றுவிக்கப்படுவார்கள். பயிற்சியின் முடிவில் நிறுவன விதிமுறைகளின் அடிப்படையில் தகுதி பெறும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு, ஆரம்ப மாத சம்பளமாக ரூ.21000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பெயர், முகவரி தொலைபேசி எண் மற்றும் முழுக்கல்வி விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகலையும் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு 15-05-2023ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவும். ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கலாம்
விவரங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
மனிதவள மேம்பாட்டுத்துறை
எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் லிமிடெட்
கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம்
ரோடு சிங்காரம்பாளையம் அஞ்சல்
கிணத்துக்கடவு கோயம்புத்தூர் - 642109
தொலைபேசி எண்கள்
0422- 2587000/2587017
9790111845/9790097334
மின்அஞ்சல்:
gobinath.ayyasamy@elgi.com
acpfrontoffice@elgi.com
Reviewed by Rajarajan
on
8.5.23
Rating:


கருத்துகள் இல்லை