மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் அரசு உத்தரவு
தமிழக அரசு மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத் திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று மற்றும் இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அ) கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
ஆ) திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு அர. சக்கரபாணி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம்
செய்யப்படுகிறார்.
இ) மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த திரு சிவ. வீ. மெய்யநாதன், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார்.
ஈ) திரு எஸ். ரகுபதி, மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் அரசு உத்தரவு
Reviewed by Rajarajan
on
24.5.23
Rating:
கருத்துகள் இல்லை