யுபிஎஸ்சி 2022 தேர்வு முடிவுகள்; தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 39 பேர் தேர்ச்சி
மத்திய அரசு பணிகளில் சேருவதற்கு யுபிஎஸ்சி 2022 தேர்வு முடிவுகள் செவ்வாய்கிழமை வெளியாகி உள்ளது. இந்த தேர்வை எழுதியவர்களில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 39 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய அளவிலான தரவரிசையில் சென்னை மாணவி ஜீஜீ, சென்னை பெரும்பூரை சேர்ந்த அவர் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 107 வது இடத்தை பிடித்து உள்ளார். அதேபோல் சரவணன் என்பவர் 147 வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார்.
அருண் என்பவர் 426 இடத்தையும், சென்னையை சேர்ந்த மதிவதனி இராவணன் என்ற பெண் 447 வது இடத்தை பிடித்து தேர்வில் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கார்த்திக் என்பவர் 488 வது இடத்தையும், பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
சுஷ்மிதாவின் சகோதரி ஐஸ்வர்யாவும் கடந்த 2020ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில தேர்ச்சி பெற்று தற்போது பொன்னேரி துணை ஆட்சியராக உள்ளார். ஒரே குடும்பத்தில் அக்காள் தங்கை என இருவரும் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பண்ருட்டியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை