Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

முதுகலை ஆசிரியர் பாட வேலையை கணக்கில் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமா..?

 

மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பாட வேலையை கணக்கில் கொண்டு ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் இருந்ததில் மேலும் ஒரு பட்டதாரி ஆசிரியரை குறைத்து நான்கு பட்டதாரி ஆசிரியர் என்னும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்....

முதுகலை ஆசிரியர்களை உபரிப்பணியிடம் என கருதாமல் அவர்களுக்கு கீழ்நிலை வகுப்புகளுக்கு இறக்கிவிட்டு பட்டதாரி ஆசிரியர்களை உபரி பணியிடம் அதுவும் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளியில் ஒன்றை குறைத்து நான்காக  நிர்ணயம் செய்வது சரிதானா...


உத்தரவை ஏதும் வழங்கப்பட்டதா..? என்றால் தெரியவில்லை.



தலைமை ஆசிரியர் கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் இணை இயக்குனரின் அறிவுறுத்தலின் பேரில் முதுகலை ஆசிரியர்களுக்கு முழுமையாக 28 பாட வேலைகள் வழங்கிவிட்டு அதன் பிறகு பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாடவேளை ஒதுக்கும்படி கூறியதாகவும் மேல்நிலைப் பள்ளியில் மூன்று முதுகலை அறிவியல் ஆசிரியர்கள் கீழ்நிலை வகுப்புகளுக்கு வருவதால் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக கருதப்படுவதாக கூறுகின்றனர்.

தற்பொழுது ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் என ஐந்து பணியிடங்கள் மட்டுமே உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஒரு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட்டு உபரியாக பட்டியலில் வந்துள்ளது.

 எனவே இனி மேல்நிலைப் பள்ளிகளில் நான்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.


ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முதுகலை ஆசிரியர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கையின் தழுவலாக இந்த பணியிடம் நிர்ணயம் உள்ளதா...

தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டதா...

மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை குறைந்தபட்சம் எட்டு பணியிடம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஐந்து பணியிடங்கள் மட்டுமே என கடந்த ஆண்டு பணி நிரவல் கலந்தாய்வின் போது நிர்ணயம் செய்யப்பட்டது.

அதனை மீண்டும் 7 பணியிடங்களாக உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ள நிலையில் 5 பணியிடங்களை மீண்டும் நான்கு பணியிடங்களாக குறைக்கும் முயற்சியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது...


இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் முதுகலை ஆசிரியர்களுக்கு மேல்நிலை வகுப்பில் 14 பாடவேளைகள் மட்டுமே இருப்பதை கணக்கில் கொண்டு மூவரையும் 6 முதல் 10 வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இருந்த ஒரே அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தை உபரி பணியிடமாக காட்டி உள்ளனர்.


 
முதுகலை ஆசிரியர் பாட வேலையை கணக்கில் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமா..? முதுகலை ஆசிரியர் பாட வேலையை கணக்கில் கொண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமா..? Reviewed by Rajarajan on 5.5.23 Rating: 5

கருத்துகள் இல்லை