Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

Teacher Transfer Counselling application கீழ் தற்போது மூன்று புதிய வசதிகள்..!



ஆசிரியர்களின் Individual login ல் Teacher Transfer Counselling application என்ற option ல்  பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான வசதி ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது. அதனை பயன்படுத்தி பொதுமாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்திருப்பீர்கள். Teacher Transfer Counselling application என்ற option க்கு கீழ் தற்போது மூன்று புதிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.


1) Pre-Select Vacancy

2) Vacancies Challange

3) Seniority Challange


1) Pre-Select Vacancy

   🍏இந்த option க்குள் சென்று Vacancy List யை பார்த்துக் கொள்ளலாம். 


   🍏மேலும், நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் Vacant place யை முன்கூட்டியே Select செய்து (அதிகபட்சம் 15 இடங்கள்) Save செய்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது எதற்காக என்றால், நீங்கள் Counselling க்கு செல்லும்போது உங்கள் turn வரும்போது நீங்கள் ஏற்கனவே உங்கள் Login ல் தேர்ந்தெடுத்து வைத்திருந்த விருப்ப Vacant Place முதலில் காட்டும். (உங்களுக்கு முன்னாடி வருபவர்கள் நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த Vacant place யை எடுக்காதிருந்தால் காட்டும், எடுத்திருந்தால் காட்டாது)

காலம் விரையம் செய்யாமல் Pre-selected Vacant list லிருந்து நீங்கள் உடனடியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 


   🍏Pre-selected List ல் உள்ள இடங்களை தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லை என்றால் மற்ற Vacancy list லிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


2)Vacancies Challange

Vacancy list ல் ஏதேனும் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டி இந்த option ல் சென்று பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்யும் request ஆனுது சார்ந்த அலுவலருக்கு செல்லும். அவர் அதனை உடனடியாக சரிசெய்து கொடுப்பார்.


3) Seniority Challange

   🍏இந்த Option ல் சென்று Seniority list யை பார்த்துக் கொள்ளலாம்.


   🍏மேலும், Seniority list ல் ஏதேனும் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டி பதிவு செய்யலாம். நீங்கள் பதிவு செய்யும் request ஆனுது சார்ந்த அலுவலருக்கு செல்லும். அவர் அதனை உடனடியாக சரிசெய்து கொடுப்பார்.

Teacher Transfer Counselling application கீழ் தற்போது மூன்று புதிய வசதிகள்..! Teacher Transfer Counselling application  கீழ் தற்போது மூன்று புதிய வசதிகள்..! Reviewed by Rajarajan on 20.5.23 Rating: 5

கருத்துகள் இல்லை