413 நீட் பயிற்சி மையங்களில் அடுத்த வாரம் முதல் , பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டுவதை தடுப்பது தொடர்பாக - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம்
தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுள் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 413 நீட் பயிற்சி மையங்களில் அடுத்த வாரம் முதல் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய இயக்க தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவ மாணவிகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேல் சாரண சரணிய இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை அமைச்சர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து செய்தியார்களை சந்தித்த அவர், அடுத்த ஆண்டு முதல் சாரண சாரணிய இயக்க மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கப்படும் என்றார். மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மேலும் பள்ளி மாணவர்கள் தங்கள் சாதியை குறிக்கும் வகையில் கைகளில் கயிறு கட்டுவதை தடுப்பது தொடர்பாக ஆதி திராவிட நலசங்கம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தங்கள் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் மாவட்ட கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய இயக்க தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்த அமைச்சர் செங்கோட்டையன், 20 ஆண்டுகளுக்கு மேல் சாரண சரணிய இயக்கத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எது நடைமுறையில் இருக்கிறதோ அதனை பின்பற்ற வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை என்றும், வண்ண கயிறு தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் கூறினார்.
மேலும் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுள் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 413 நீட் பயிற்சி மையங்களில் அடுத்த வாரம் முதல் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
413 நீட் பயிற்சி மையங்களில் அடுத்த வாரம் முதல் , பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்டுவதை தடுப்பது தொடர்பாக - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் விளக்கம்
Reviewed by Rajarajan
on
15.8.19
Rating:
கருத்துகள் இல்லை