கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள்
தமிழகத்தில் 45 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கான அரசாணையையை உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி இளங்கலை பாடப்பிரிவில் 69 புதிய பாடங்களும், முதுகலை பாடப்பிரிவில் 12 புதிய பாடங்களும் தொடங்கப்பட உள்ளன. மேலும் 2019 முதல் 2022 வரையிலான 3 கல்வி ஆண்டுகளுக்குள் 450 பேராசிரியர்களை நியமனம் செய்ய 36 புள்ளி 78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டிலேயே 167 பேராசிரியர்களை பணியமர்த்தி, 81 புதிய பாடப்பிரிவுகளிலும் மாணவர்களை சேர்த்து ஆகஸ்ட் 31-க்குள் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்று 45 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாக 81 பாடப்பிரிவுகள்
Reviewed by Rajarajan
on
15.8.19
Rating:

கருத்துகள் இல்லை