Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை


த்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கல்வி கொள்கை என்றால் என்ன என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கல்வி... இந்தியாவில் கல்வியை மேம்படுத்த உருவாக்கப்படுவது தேசியக் கல்விக் கொள்கை(NEP).
முதன் முதலில் 1968-ம் ஆம் ஆண்டு இந்திராகாந்தி பிரதமராகப் பதவி வகித்தபோது,முதல் தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.
இரண்டாவதாக 1986-ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அரசு ஒரு புதிய தேசிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்தது.
ராஜீவ் காந்தி அரசின் கல்விக்கொள்கையில், காலத்துக்கு ஏற்றவாறு 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் சில மாற்றங்களை செய்து தொடர்ந்தனர்.
2005-க்குப் பின் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று 2014 மக்களைவைத் தேர்தல் வாக்குறுதிகளுள் ஒன்றாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது.
பா.ஜ.க அரசு வெற்றி பெற்ற உடன், தேசிய கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை வழங்க, மத்திய அரசின் முன்னாள் செயலாளர், டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.
2016-ல் தாக்கல் செய்யப்பட்ட தேசிய கல்விக்கொள்கை வரைவில், உயர் கல்விக்கு தனி ஆணையம்; தனியார் மயம் உள்பட, பல பரிந்துரைகளை சுப்ரமணியம் குழு வழங்கியிருந்தது.
இதற்கு, பரவலாக எதிர்ப்பு எழுந்ததையடுத்து, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர், கஸ்தூரி ரங்கன் தலைமையில், ஒன்பது பேர் இடம் பெற்ற மற்றொரு குழு 2017ல் அமைக்கப்பட்டது.
2017 முதல் 2019 வரை இரண்டு ஆண்டுகள் கஸ்தூரி ரங்கன் குழு பல்வேறு தரப்பினருடன் ஆலோசனைகளை நடத்தி, 484 பக்கங்கள் கொண்ட, வரைவு தேசிய கல்வி கொள்கையை, மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. 
விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்த பரிந்துரைகளில் முக்கியமானது, பள்ளிக்கல்வியின் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாகும்.
தற்போது 6 முதல் 14 வயதுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை, 3 முதல் 18 வயது என மாற்ற இக்குழு பரிந்துரை செய்துள்ளது.

3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு பன்மொழி கற்கும் அறிவு ஆற்றல் அதிகம் இருக்கும், எனவே அடிப்படை நிலையிலேயே மூன்று மொழிகளை கற்பிக்க தொடங்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது.
9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நான்காண்டுகளுக்கு 8 செமஸ்டர் என்ற அடிப்படையில் கல்லூரிகள் போல தேர்வுகள் நடத்தப்படும்.
இசை,ஓவியம், சிற்பம், பானை வனைதல், தோட்டக்கலை, மின் வேலை போன்றவை கலைத்திட்ட பகுதியாக கருதப்படும்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் அறிவியல் பாடத்தை இரண்டு மொழிகளில் கற்க வேண்டும்.உயர்நிலை பள்ளியில் வேற்று நாட்டு மொழி படிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

சமஸ்கிருதத்தில் உள்ள பாட புத்தகங்களை பள்ளி கல்லூரி பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும்.
அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளியில் சேர்ந்தது முதல் கர்நாடகம், ஹிந்துஸ்தானி இசையின் ராகங்கள் தாளங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.
3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாநில அரசால் நடத்தப்பட வேண்டும். இதில் மூன்றாம் வகுப்பிற்கு எண்கணிதம், அடிப்படை கல்வி மற்றும் திறன்களை பரிசோதிப்பதாக அமையும்.
2020ஆம் ஆண்டு முதல் NTA மூலமாக அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கும் நுழைவுத்தேர்வு வைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். வீணாக ஆசிரியர் பணிமாறுதல் இருக்காது. பிஎட் படிப்பு 4 ஆண்டுகளாக மாற்றப்படும்.
பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், மொழி வன்மையை மேம்படுத்தவும் இதுபோன்ற பரிந்துரைகள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கஸ்தூரி ரங்கன் குழு தெரிவித்துள்ளது.

இந்த வரைவு தேசிய கல்விக்கொள்கை அறிக்கை மீதான கருத்துக்களை, வரும் 15-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்களின் கருத்துகள் பெறப்பட்டு, அமைச்சரவையின் ஒப்புதலுடன் அறிக்கை இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை www.mhrd.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
அறிக்கையை முழுமையாக பார்வையிட்டு பரிந்துரைகள் மீது ஏதேனும் கருத்து மாறுபாடு இருந்தால் பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்கள் கருத்துகளை nep.edunic.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மத்திய அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை Reviewed by Rajarajan on 3.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை