மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி துறையில் ஆர்வத்தை தூண்டும் புதிய முயற்சி
விண்வெளி ஆராய்ச்சி துறையில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், பாடத்திட்டத்துடன் ஆராய்ச்சி தொடர்பான பாடங்களையும் இணைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக முன்னாள் சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை செய்தியாளர் மன்றத்தில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேட்டியளித்த முன்னாள் மயில்சாமி அண்ணாதுரை, விக்ரம் சாராபாயின் 100வது பிறந்த நாளையொட்டி அரசு பள்ளி மாணவர்களிடையே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பாக போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
இதில் 12 அரசு பள்ளிகளை சேர்ந்த 12 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் உருவாக்கிய 12 மாதிரிகள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு சார்பில், அண்மையில் சிறுசேரியிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் ஹீலியம் பலூன் மூலம் விண்ணிற்கு அனுப்பப்பட்ட இந்த ஆய்வு மாதிரிகள் வெற்றிகரமாக விண்ணில் 25 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று திரும்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார். விண்வெளி ஆராய்ச்சியில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால் பல இளம் விஞ்ஞானிகளை உருவாக்கிட முடியும் என மயில்சாமி கூறினார்.
மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி துறையில் ஆர்வத்தை தூண்டும் புதிய முயற்சி
Reviewed by Rajarajan
on
14.8.19
Rating:
கருத்துகள் இல்லை