போலி பட்டச் சான்றிதழ்கள் விற்பனை; யு.ஜி.சி., விசாரிக்க அரசு உத்தரவு
சில பல்கலைக்கழகங்களில், போலி பட்டச் சான்றிதழ்கள் விற்கப்படுவது பற்றி விசாரிக்க, சிறப்பு குழு அமைக்குமாறு, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழுவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில், மோசடி கும்பல் ஒன்று, &'வகுப்புகளுக்கே செல்லாத மாணவர்களுக்கு, அங்கீகாரம் பெற்ற பல்கலையிலிருந்து, போலி பட்டச் சான்றிதழ் வாங்கி தருகிறது&' என, சமீபத்தில், பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், &'டுவிட்டர்&' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சில பல்கலைக் கழகங்களில், போலி சான்றிதழ்கள் விற்கப்படுவதாக வந்துள்ள தகவல்கள் கவலையளிக்கின்றன. இது பற்றி விசாரிக்க, உயர் மட்டக்குழு ஒன்றை, யு.ஜி.சி., அமைக்க வேண்டும். இந்தக் குழு, மூன்று வாரங்களில், விசாரணையை முடித்து, போலி சான்றிதழ்கள் வழங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் நபர்களை கண்டறிய வேண்டும். விசாரணை குழு தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
போலி பட்டச் சான்றிதழ்கள் விற்பனை; யு.ஜி.சி., விசாரிக்க அரசு உத்தரவு
Reviewed by Rajarajan
on
2.9.19
Rating:
கருத்துகள் இல்லை