NHIS - ல் பெற்றோரும் சிகிச்சை பலனைப் பெறலாம் - மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு
*NHIS-ல் திருமணமானவரின் பெற்றோரும் சிகிச்சை பலனைப் பெறலாம் - செ. உ. நீ. மன்ற மதுரைக் கிளை !!!.*
*NHIS திட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட பின்னர், தனது பெற்றோருக்கு இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளக் கூடாதென கூறப்பட்டு வருகிறது.*
*இதனடிப்படையில் உசிலம்பட்டி டாஸ்மாக் ஊழியரான திரு. எஸ். வீரபாண்டி என்பவர் தனது தந்தைக்கு மேற்கொண்ட மருத்துவச் சிகிச்சைக்கு NHIS -ல் மருத்துவச் செலவினங்களை மேற்கொள்ள மறுக்கப்பட்டது.*
*இதனைத் தொடர்ந்து திரு. எஸ். வீரபாண்டி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.* *[ W.P.(MD) No.4117 of 2018 & W.M.P.(MD) No.4277 of 2018 ]*
*இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மனுதாரர் தனது ததந்தைக்கு மேற்கொண்ட மருத்துவச் சிகிச்சைக்குரிய தொகையை 8 வாரங்களுக்குள் NHIS-ல் ஈடு செய்து தர உத்தரவிட்டார்.*
*The petitioner is working as Salesman in a liquor outlet run by TASMAC. He is a regular employee. He is a member of the Medical reimbursement scheme introduced by TASMAC. The petitioner's father underwent a Lung surgery. When a claim for reimbursement was made, it was denied on the only ground that the petitioner got married and that therefore his father cannot be a beneficiary.*
*This ground of rejection was specifically frowned upon by this Court in W.P.(MD)No.7365 of 2010 dated 26/07/2011.*
*Therefore the order impugned in this writ petition is quashed.*
*The second respondent is directed to process the petitioner's medical reimbursement claim and effect settlement in terms of the scheme announced by the TASMAC for its employees.*
*The medical reimbursement shall be done within a period of 8 weeks from the date of receipt of a copy of this order.*
*இதனை எதிர்த்து டாஸ்மாக் நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் & சதீஸ்குமார் அமர்வு தனி நீதிபதி அளித்த உத்தரவே செல்லுமென தீர்ப்பளித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது !!!.*
(வழக்கு பதிவு செய்தால், இந்த தீர்ப்பினை மேற்கோள் காட்டி வெற்றி பெறலாம்)
NHIS - ல் பெற்றோரும் சிகிச்சை பலனைப் பெறலாம் - மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு
Reviewed by Rajarajan
on
3.9.19
Rating:
கருத்துகள் இல்லை