Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.09.19


திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:279

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.

விளக்கம்:

நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்து தோன்றும் யாழ், இசை, இன்பம் பயக்கும். அது போலவே மக்களின் பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து கொள்ள வேண்டும்.

பழமொழி

There is no smoke without fire.

 நெருப்பில்லாமல் புகையாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது இருப்பிடம் மற்றும் தெரு சுத்தமாக இருக்க முயல்வேன். எனது சுற்றத்தார் தெருவில் இருப்போரும் அவ்வாறு இருக்க வலியுறுத்துவேன்.

2. தூய்மை பாரதத்திற்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

பொன்மொழி

ஏற்றமும் ஒரு நாள் சரிவை எதிர் கொள்ளும்..அன்று மனம்
உடையாமல் ,வளைந்து சரிசெய்தால் சமதளத்தை எளிதாக அடையலாம்...

----அரிஸ்டாட்டில்

பொது அறிவு

1. உலகிலேயே அதிக காலம் பதவி வகித்து வரும் முதல் பெண் தலைவர் யார்?

ஷேக் ஹசீனா- வங்காள தேச பிரதமர். 16 ஆண்டுகள்

2. இந்தியாவிலேயே அதிக காலம் பதவி வகித்த பெண் தலைவர் யார்?

இந்திரா காந்தி அம்மையார்- 15 ஆண்டுகள்

English words & meanings

Ozone - a gas with 3 oxygen.
ஓஸோன். புவியின் இரண்டாவது அடுக்கான வளிமண்டலத்தில் உள்ளது. இது சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

Overjoy - great joy or delight.
அதிக மகிழ்ச்சி

ஆரோக்ய வாழ்வு

மணத்தக்காளி கீரையின் சாறு கல்லீரல் ,கணையத்தின் வீக்கம், மூலநோய் , பால்வினைநோய் நீர்க்கோர்வை ஆகியவற்றினை குணப்படுத்தும் .

Some important  abbreviations for students

* ID = Indonesia

* IE = Ireland

நீதிக்கதை

வானமும் உயரமும்

முன் ஒரு காலத்தில் ஒரு கிழவி தினந்தினம் மோர் விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அந்த காலத்தில் வானம் பூமிக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது. மனிதர்களும் மரம், செடி கொடிகளும் சிறியதாக இருந்தன.

தினமும் வானம் இடித்து மோர்க்குடம் கவிழ்ந்து போய்விடும். இதனால் கிழவிக்கு ரொம்ப கோபமாக இருந்தது. ஒரு நாள் என் மோர் கொட்டி என் பிழைப்பைக் கெடுக்கும். வானமே! நீ பூமியிலிருந்து எட்டு-பத்து வண்டி நிறைய ஏற்றப்பட்ட நூலைப் பிரித்து நீட்டினால் எவ்வளவு தூரம் வருமோ அவ்வளவு தூரம் மேலே செல்ல வேண்டும் என்று சாபமிட்டாள். அன்றையிலேருந்து வானம் கண்ணுக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது.


இன்றைய செய்திகள்

13.09.2019

* உற்பத்தித்துறையின் மந்தமான நிலை காரணமாக தொழிற்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 4.3% ஆகக் குறைந்ததாக வியாழனன்று வெளியிடப்பட்ட அரசு தரவு வெளியீடு கூறியுள்ளது.

* பள்ளிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

* நம் சூரியக் குடும்பத்தில் இருந்து 110 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியில் இருப்பதைப் போன்று தண்ணீர், தட்பவெப்பநிலை கொண்ட புதிய கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்கள் முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை 'ஜர்னல் ஆப் நேச்சர் அஸ்ட்ரானமி' என்ற இதழில் வெளியாகியுள்ளது.

* உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் வலிமையான கத்தாருக்கு எதிரான போட்டியை இந்திய அணி 'டிரா' செய்தது.

* தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Today's Headlines

🌸 Due to dullness in the  industrial production reduced by 4.3% says the official announcement by government on Thursday.

🌸  The precautionary steps against Dengue Fever has to be taken in all the schools throughout Tamil Nadu adviced by the directorate of school education to all CEOS and DEOS through circular.

🌸As like our Earth which is 110 light years from our  Solar Family Astronauts found another planet with water and the same climate as of Earth. A research paper regarding this is published in 'Journal of Nature Astronomy'.

🌸In World Cup final rounds against the mighty Qatar Indian foot ball team made the 'draw'.

🌸 The list of Indian cricket players who is going to play against South African team is announced today.

Prepared by
Covai women ICT_போதிமரம்


School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.09.19 School Morning Prayer Activities  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.09.19 Reviewed by Rajarajan on 13.9.19 Rating: 5

கருத்துகள் இல்லை