Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.12.19



திருக்குறள்


அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:337

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

விளக்கம்:

ஒரு பொழுதுகூட வாழ்க்கையைப் பற்றி உண்மையைச் சிந்தித்து அறியாதவர்களே, ஆசைக்கோர் அளவின்றி மனக் கோட்டைகள் கட்டுவார்கள்.

பழமொழி

Double charge will break even a cannon

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள்

 1. காலம் பொன் போன்றது. எனவே என் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன்.

2. கடமை கண் போன்றது எனவேஎனது படிப்பிலும் என் கடமைகளை முடிப்பதிலும் கவனம் செலுத்துவேன்.

பொன்மொழி

வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சமூகத்தில் உயர்ந்த நிலையில் வரவேண்டும் என தினசரி கனவு கண்டேன். உலகில் கோடீஸ்வரர் ஆனேன் ...

    ----ராக் பெல்.

பொது அறிவு

1. முட்டை இடும் பாலூட்டி   எது?

வாத்தலகி எனும் பிளாட்டிபஸ்

2. குதிக்க முடியாத விலங்கு எது?

யானை

English words & meanings

Xylography – art of engraving on wood. மரக் கட்டைகள் மீது செய்யப்படும் அழகிய கலை நுணுக்கம் குறித்த படிப்பு.

 xanthic--yellowish. மஞ்சள் நிறமான

ஆரோக்ய வாழ்வு

 கேரட்டை மிக்ஸியில் சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால் இரத்தசோகை குறையும்.

Some important  abbreviations for students

cr. = credit

crit. = criticism

நீதிக்கதை

அதிர்ஷ்டக்கதவு எப்போது திறக்கும்?

தன் கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவருக்கு வெயிலால் நாக்கு வரண்டது. வழியில் ஒரு கிணற்றில் இளைஞன். ஒருவன் கிணற்றில் தண்ணீர் இரைத்து பாத்தியிலுள்ள செடிகளுக்கு பாய்ச்சிக் கொண்டிருந்தான். முதியவர் அவனிடம் தண்ணீர் வாங்கி குடித்தார்.

தாகம் தீர்த்த மகிழ்ச்சியில் முதியவர் தம்பி, எங்கும் வறட்சி நிலவுகிறதே, ஆனால் உன் தோட்டத்து கிணற்றில் மட்டும் தண்ணீர் நன்றாக ஊறுகிறது. அதிர்ஷ்டம் உன் பக்கம் இருப்பதால் தான் இது சாத்தியமாகி இருக்கிறது என்றார். ஐயா, உழைப்பின் தன்மையை அதிர்ஷ்டம் என்று சொல்லி கொச்சைப்படுத்தாதீர்கள்.

அத்தனையும் என் உழைப்பு. அவ்வப்போது என் கிணற்றை தூர்வாரி பராமரிப்பு செய்ததால் இந்த வறட்சியிலும் என் கிணறு வற்றவில்லை. விடாமுயற்சியுடன் பாடுபட்டதால் தான் இந்த கட்டாந்தரை கூட பூஞ்சோலையாக மாறியிருக்கிறது. உழைப்பு என்னும் விலை கொடுத்தால் மட்டுமே அதிர்ஷ்டக்கதவு திறக்கும் என்றான். முதியவரும் இளைஞனை தட்டிக்கொடுத்து புறப்பட்டார்.

இன்றைய செய்திகள்

05.12.19

* மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

* பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் சிறுமிகளுக்கு தற்காப்புப் பயிற்சி கட்டாயமாக அளிக்க வேண்டும் என்று மத்திய  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வலியுறுத்தியுள்ளார்.

*  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதை குறித்து நாளை காலை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

* நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்க வேட்டையை தொடா்ந்து வருகிறது. இதுவரை 40 க்கும் பதக்கம் வென்றுள்ளனர் இந்திய அணியினர்.

* மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி அணி, ஒடிஸா எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

Today's Headlines

🌸 The Marina beach to be cleaned and upgraded into world-class with in six months Highcourt has ordered

 🌸Union Minister of Human Resource Development Ramesh Pokriyal Nishank has urged the government to provide self-defense training for girls in schools, in  consideration with the safety of the girls.

 🌸Supreme Court has to decide on local government elections in Tamil Nadu by tomorrow morning.

 🌸 India is pursuing the medal hunt in the upcoming South Asian Games in Nepal.  The Indian team has won 40 medals so far.

 🌸 Bengaluru FC beat Odisha FC 1-0 in the ISL football tournament in Pune, Maharashtra.

Prepared by
Covai women ICT_போதிமரம்
School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.12.19 School Morning Prayer Activities பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.12.19 Reviewed by Rajarajan on 5.12.19 Rating: 5

கருத்துகள் இல்லை