தனியார் பள்ளிகள் 15 சதவீத கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு
கொரோனா காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 15 சதவீதத்தை தனியார் பள்ளிகள் தள்ளுபடி செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளிக் கட்டணங்களைக் குறைக்கும் வகையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் பெற்றோர்களின் அமைப்புகள் சில நிவாரணங்களைக் கோரி வருகின்றன. அனைத்து மனுக்களையும் ஜனவரி 6, 2022 அன்று உயர்நீதிமன்றம் விசாரித்தது. தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜேஜே முனீர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. நீதிமன்ற உத்தரவுப்படி, அடுத்த கல்வி அமர்வில் 15 சதவீத கட்டணத்தை கணக்கிட்டு மாற்றி அமைக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்திய அல்லது பள்ளியை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு, அந்தத் தொகையை கணக்கிட்டு அவர்களுக்கே திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை