மீண்டும் அவகாசம் கேட்டால், உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என்று எச்சரிககை
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டு தோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசின் நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திற்கு எதிரான தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம், நீட் தேர்வு வேண்டாம் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தது. மேலும் 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் தேர்வு அறிக்கைக்கு எதிராகவும் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு கொண்டு வந்த நீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு சார்பாக மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கி சட்டம் இயற்றியதால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒத்தவைக்கப்பட்ட இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில், தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை ஒத்தவைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் தமிழக அரசு வாதிட தயாராக வரவில்லையா என்றும், ஒவ்வொருமுறையும் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக அரசின் நீட் விலக்கு மசோதான நெடு நாட்களாக கிடப்பில் உள்ளதால் நீட் தேர்வு சட்டத்திற்கு எதிராக எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என்பதை உறுதி செய்கிறது. நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதால், நீட் சட்டத்தின் அடிப்படை தன்மை குறித்து கேள்வி எழுப்ப கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து ஆளுனர் குடியரசு தலைவர் என காரணம் கூறி இந்த வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்டால், உச்சநீதிமன்றம் இதில் தலையிடாமல் வழக்கை தள்ளுபடி செய்ய நேரிடும் என்று எச்சரிககை விடுத்த நீதிபதி வழக்கை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை