முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் ஆய்வு கூட்டம் 27 முதல் 29 வரை பள்ளி கல்வி துறை அறிவிப்பு
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்துமா வட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.01.2023, 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், ஹோட்டல் தமிழ்நாடு- ல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஆய்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைகல்வி),மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் 30.01.2023 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலககட்டிட கூட்ட அரங்கில் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைகல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Rajarajan
on
13.1.23
Rating:


கருத்துகள் இல்லை