Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ..மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை


தமிழகத்தில் குறைந்த மாணவர் களைக் கொண்ட 46 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆக.10-ம் தேதிக்குள் நூலகம் அமைக்க வேண்டும் என நூலகத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக நீல கிரி மாவட்டத்தில் 6 பள்ளிக் கட்டிடங்களில் நூலகம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல, வேலூர், சிவகங்கையில் தலா 4 பள்ளிகளிலும், விருதுநகர், திருவண்ணா மலை, திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரியில் தலா 3 பள்ளி களிலும் நூலகம் தொடங்கப்பட உள்ளது.மேலும், விழுப்புரம், தூத்துக் குடி, புதுக்கோட்டை, கரூர், திண் டுக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங் களில் தலா 2 பள்ளிகளிலும், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டி னம், காஞ்சிபுரம் மற்றும் கோவை யில் தலா 1 பள்ளியிலும் நூலகம் அமைக்கப்பட உள்ளது.


நூலகம் அமைக்க உள்ள ஊர்களில் வாடகைக் கட்டிடத்தில் நூலகம் இயங்கினால், அது பள்ளிக் கட்டிடத்துக்கு மாற்றப் படும். இல்லையெனில், முதல் கட்டமாக 500 புத்தகங்களைக் கொண்டு நூலகம் தொடங்கப்படும்.இந்நூலகம் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை செயல்படும். பிளஸ் 2-வுடன் சிஎல்ஐஎஸ் படித்தவர்கள், ரூ.315 தினக்கூலி அடிப்படையில் இங்கு தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

பள்ளிக் கட்டிடங்களில் அமைக் கப்படும் நூலகத்தால் ஏற்படும் செலவுகள், நூலக ஆணைக் குழு நிதியில் இருந்து பார்த்துக் கொள்ளப்படும். 46 இடங்களிலும் புதிய நூலகங்களை ஆக.10-ம் தேதிக்குள் அமைத்து, அதற்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என நூலகத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தனர்.
குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ..மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்த மாணவர்களைக் கொண்ட 46 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நூலகமாக மாற்றம் ..மாவட்ட வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை Reviewed by Rajarajan on 6.8.19 Rating: 5

கருத்துகள் இல்லை