காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி” - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
To
மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு முடிந்த பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி இந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அத்துடன் விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை எடுக்க உத்தரவிடப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் விளக்கமளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என விளக்கமளித்துள்ளது. அத்துடன் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம்
என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் கூறப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி” - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Reviewed by Rajarajan
on
16.9.19
Rating:
கருத்துகள் இல்லை