Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு

தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அனைவரையும் துணை தேர்வு எழுத வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தற்போது 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.


இந்நிலையில் 10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற அல்லது வருகைப்புரியாத தேர்வர்களுக்கு தேர்வு முடிவுக்கு பின் ஜூலை / ஆகஸ்ட் 2022 ல் சிறப்புத் துணை பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் தம் பள்ளியில் பயின்று மே 2022 ல் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் எவரையும் விடுபடாமல் ஜூலை & ஆகஸ்ட் 2022 ல் சிறப்பு துணைத் தேர்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்திட உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.


மேலும் மாணவர்களை தொடர்பு கொண்டு தேர்வுக்கு தயார் செய்திடவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிகள் ஏதேனும் இப்பணியினை செய்யாது புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பு துணைத் தேர்விற்கு அறிவிப்பு பெற்ற உடன் உரிய காலத்தில் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு Reviewed by Rajarajan on 8.6.22 Rating: 5

கருத்துகள் இல்லை